Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் புதிய ... திருப்பதியில் புத்திகே மடத்தின் பீடாதிபதி சுகுணேந்திர தீர்த்த ஸ்வாமிகள் தரிசனம் திருப்பதியில் புத்திகே மடத்தின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயில், மழையில் வீணாகும் நயினார்கோவில் அம்பாள் தேர்; தேர் நிற்கும் இடத்தில் டூவீலர் நிறுத்திவைப்பு
எழுத்தின் அளவு:
வெயில், மழையில் வீணாகும் நயினார்கோவில் அம்பாள் தேர்;  தேர் நிற்கும் இடத்தில் டூவீலர் நிறுத்திவைப்பு

பதிவு செய்த நாள்

03 ஜன
2024
04:01

நயினார்கோவில்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் நாகநாத சுவாமி அம்பாள் தேர் நிறுத்தும் இடத்தில் டூவீலர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர் வெயில், மழையில் வீணாகி வருகிறது.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற பெருமை பெற்ற சவுந்தர்ய நாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் நயினார்கோவிலில் உள்ளது. இங்கு வருடம் முழுவதும் நாகதோஷம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிகாரங்களுக்கும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மற்றும் ஆடி பிரம்ம உற்சவம் என அம்பாள் மற்றும் சுவாமிக்கு தனித்தனியாக கொடியேற்றத்துடன் நடப்பது வழக்கம். அப்போது சுவாமி, அம்பாள் நான்கு மாட வீதிகளில் தேரில் வலம் வருவர். இதன் முக்கிய விழாவாக அம்பாள் திருக்கல்யாணம் நடக்கும் நாளில் சுவாமி, அம்பாள் தென்னங்குருத்து மற்றும் கோரதம் எனப்படும் மிகப்பெரிய தேரில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில் கோயில் பராமரிப்பு இல்லாமல் உள்ள சூழலில், சுவாமிகளை சுமந்து செல்லும் வாகனங்களும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வைத்துள்ளனர். இதேபோல் கோரதம் வைப்பதற்கு என கோயில் முன்பு மிகப்பெரிய அறை கட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக அம்பாள் சன்னதி முன்பு மழை மற்றும் வெயிலுக்கு மத்தியில் ரதத்தை கவனிப்பாரின்றி நிறுத்தி வைத்துள்ளனர். பல நூறு ஆண்டுகளைக் கடந்த இது போன்ற கோயில்களில் சுவாமி புறப்பாடுகளுக்கு தேர் செய்வது என்பது இயலாத காரியம். ஆகவே கலைநயத்துடன் உள்ள தேரினை பாதுகாக்க, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
போடி; பவுர்ணமியை முன்னிட்டு போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar