அயோத்தி ராமருக்கு சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2024 11:01
அயோத்தி: உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஜன.,22ல் நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன.
பெட்டிகளில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், உயர்தரமான ஆடைகள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் அரிசி ஆகியவை நேபாளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர். நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்தியை வந்தடைந்துள்ளன.
இது பாரதப் பாரம்பரிய வழக்கத்தில் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்கு கொடுத்து அனுப்பும் சீர்வரிசையைப் போன்றது என நேபாள ராம பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கோயிலில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை செதுக்குவதற்காக நம் அண்டை நாடான நேபாளத்தின் கண்டகி ஆற்றங்கரை பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சாலிகிராம கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.