பதிவு செய்த நாள்
03
ஜன
2024
04:01
சூலூர்; வீடுகள் தோறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணி சூலூர் வட்டாரத்தில் தீவிரமாக நடக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில், குழந்தை ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு வருகிறது. வரும், 22 ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும் கோவில் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று , ஹிந்து இயக்கத்தினர் கொடுத்து வருகின்றனர். சூலூர் வட்டாரத்தில் இப்பணி கடந்த, 1 ம்தேதி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. சூலூர், முத்துக்கவுண்டன் புதூர், முதலிபாளையம் லட்சுமி நகர், சோமனூர், கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளையம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஹிந்து இயக்க நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று, பெண்களுக்கு குங்குமம் கொடுத்து, வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர். மேலும், ஜன., 22 ம்தேதி மதியம், 12:00 மணிக்கு வீடுகள்,கோவில்களில் ராம நாம ஜபம் செய்யவும், அன்று மாலை, வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றவும் வலியுறுத்தி ஹிந்து இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.