Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மஹா ... அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால கொடியேற்றம்; பக்தர்கள் பரவசம் அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கொடியுடன் 40 ஆயிரம் கி.மீ நடந்தே நாடுமுழுதும் கோயில்களை தரிசித்து வரும் கல்லூரி மாணவர்!
எழுத்தின் அளவு:
சிவன் கொடியுடன் 40 ஆயிரம் கி.மீ நடந்தே நாடுமுழுதும் கோயில்களை தரிசித்து வரும் கல்லூரி மாணவர்!

பதிவு செய்த நாள்

06 ஜன
2024
08:01

திருப்புவனம்; உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னந்தனியே நடந்தே இந்தியாவில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய தேசிய கொடி மற்றும் சிவன் கொடியுடன் செல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ரன்வீர்சிங், கல்லூரியில் பி. ஏ., படித்து வரும் இவருக்கு சிறுவயது முதலே கோயில்களுக்கு செல்வது வழக்கம், இந்தியாவில் உள்ள கோயில்களின் பிரம்மாண்டம், வழிபாடு, கலாச்சாரம் ஆகியவற்ளை கண்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது இளவயது கனவாக இருந்துள்ளது. பெற்றோரிடம் தனது ஆசையை தெரிவித்த போது படிப்பை முடித்து விட்டு செல்லலாம் என தெரிவித்ததால் கல்லூரி படிப்பை முடித்த உடன் கிளம்பியுள்ளார். கடந்தாண்டு மார்ச்சில் கிளம்பிய இவர் ஏழு மாதங்களில் பல்வேறு கோயில்களில் நடந்தே தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கிருந்து நான்கு வழிச்சாலை வழியாக மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க சென்று கொண்டுள்ளார்.

ரன்வீர்சிங் கூறுகையில் : 40 ஆயிரம் கி.மீ., நடக்க வேண்டும் என திட்டமிட்டு பத்து மாதங்களில் ஏழாயிரம் கி.மீ கடந்துள்ளேன், ராமேஸ்வரம் சென்று விட்டு மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரம், திருப்பதி, பீகார், ஒடிசா வழியாக அமர்நாத்தில் இறுதியாக நிறைவு செய்ய உள்ளேன், சிறுவயதில் இருந்தே கோயில்களுக்கு செல்வதற்காக பணம் சேமித்து வந்தேன், வழியில் பார்க்கும் பொதுமக்கள் பலரும் உணவு, உடை உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றனர். ஆங்காங்கே உள்ள கோயில்களில் இரவில் தங்கும் இவர் காலையில் நீர் நிலைகளில் நீராடிய பின் பயணத்தை தொடர்கிறார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 கி.மீ., வரை நடந்து வருகிறேன், இன்னும் இரண்டு வருடங்களில் எனது பயணம் நிறைவடையும், என்றார்.

தினசரி நடக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள், சம்பவங்கள், போன்றவற்றை தனது யூ டியூப் பக்கத்திலும் பதிவேற்றி வருகிறார். இன்றைய கால இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிரிக்கெட், சினிமா உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர் கோயில்களை பார்க்க செல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடை பயணம் செல்லும் இவரை பலரும் ஆங்காங்கே பாராட்டி வாழ்த்தி வழியனுப்பி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar