புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நேற்று மகாசண்டி ஹோமம் நடந்தது.சசிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் 38ம் ஆண்டு நவராத்திரி விழா, 16ம் தேதி துவங்கியது. தினந்தோறும் காலையில், ஹோமங்களும், மாலையில், இசை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஆயுத பூஜை தினமான நேற்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மகாசண்டி ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.