புதுச்சேரி: பேட்டையன்சத்திரம் சிவசடையப்பர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பேட்டையன்சத்திரத்தில் உள்ள சிவசடையப்பர் சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு சாரதா நவராத்திரி மகோற்சவம் 15ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு 2ம் கால சண்டிமஹா யாக பூஜை, தேவி மஹாத்மிய சப்தசதி ஹோமம், வடுக பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகம், அம்மனுக்கு விசேஷ கலசாபிஷேகம் நடந்தது.இன்று (24ம் தேதி) மாலை 7 மணிக்கு, திரிபுரசுந்தரி அம்பிகைக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.