Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகிலம் போற்றும் ஆன்மிக பூமி; களை ... ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் தங்க பாதுகையுடன் அயோத்திக்கு ஒரு நெடிய பாதயாத்திரை ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் தங்க ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
அற்புத அயோத்தி ; எங்கும் ஒலிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்..!
எழுத்தின் அளவு:
அற்புத அயோத்தி ; எங்கும் ஒலிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்..!

பதிவு செய்த நாள்

08 ஜன
2024
12:01

ராமாயணத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான தேதி குறிக்கப்பட்டதும், அயோத்தி நகரமே தேவலோகம் போல் ஜொலித்து, திருவிழா கோலம் பூண்டதாக படித்திருப்போம். ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேக தேதி குறிக்கப்பட்டதிலிருந்து, அயோத்தி நகரம் இப்போதும் அப்படித் தான் காட்சியளிக்கிறது.

திரும்பும் திசையெங்கும் காவிக் கொடிகள், பிரமாண்டமான கட்டுமான பணிகள், ஜெய் ஸ்ரீராம் கோஷம் என, மிகப் பெரிய கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது அயோத்தி. அயோத்திக்கான தற்போதைய பஸ் நிலையம், நகரிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் பைசாபாத் என்ற இடத்தில் உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், நாடு முழுதும் இருந்து பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், அயோத்தியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் லக்னோ - கோரக்பூர் நெடுஞ்சாலை அருகே, 400 கோடி ரூபாய் செலவில், ஒன்பது ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்டப்பட்டு, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

புதுடில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, மதுரா, அஜ்மீர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து, மக்கள் எளிதாக அயோத்திக்கு வந்து செல்ல வசதியாக, தொலைநோக்கு பார்வையுடன் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து பஸ்கள் எளிதாக வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலங்களும் வேகமாக தயாராகி வருகின்றன. கலை அரங்கு, வணிக வளாகம், உணவகங்கள், வங்கி, ஏ.டி.எம்., நவீன கழிப்பறை, மருத்துவ வளாகம், தபால் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், உதவி மையம், பல அடுக்கு வாகன நிறுத்தம் என, உலக தரத்திலான வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் மற்றும் கலையரங்கின் சுவர்கள் முழுதும் ராமாயண காட்சிகளை தத்ரூபமாக விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதிலும், ராமர் - சீதா திருமணம் தொடர்பான ஓவியங்கள் கொள்ளை அழகு.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் குழுவினர் வருகை தந்ததையொட்டி, இங்குள்ள கலையரங்கில், அவர்களுக்காக உத்தர பிரதேசத்தில் பிரபலமான, மயில் நடனம் மற்றும் ரங் பெர் ஹோலி போன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், இந்த கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்களில் ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் பாடல்களை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அயோத்திக்கு வந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது, நள்ளிரவில் வந்து பஸ் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அடுத்த சில நாட்களில் அயோத்தி நகரம், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பெறப் போகிறது என்பதை, இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

சி.ஆர்.பி.எப்., வீரர்; காசி தமிழ் சங்கமம் குழுவிலிருந்து அயோத்திக்கு வருவோர், எந்தவிதமான நெருக்கடியுமின்றி தரிசனம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பவர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் பாலு. இவர், தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்தவர். தற்போது ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவருக்கு, தமிழுடன் ஹிந்தியும் நன்றாக பேசத் தெரியும் என்பதால், அயோத்தி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, தமிழர்களுக்கு உதவும் பணியில், இவரை சி.ஆர்.பி.எப்., நியமித்துள்ளது.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar