ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயில் கருவறை; சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டன
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2024 08:01
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கருவறை சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டன. வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் ராமர் சிலை வைக்கப்படஉள்ள கருவறை சன்னதியி்ல் நேற்று 12 அடி உயரமும், 8 அடிஅகலமும் கொண்ட தங்க கதவுகள் பொருத்தப்பட்டன. முன்னதாக நேற்று அயோத்தி வருகை தந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், கும்பாபிஷேக த்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு; கோயில் திறப்பு விழாவையொட்டி, வால்மீகி சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் கீழ் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.