Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயில் ... அயோத்தி கும்பாபிஷேகம்; ஜனவரி 22ல் விடுமுறை.. தேசிய விழாவாக அறிவித்தது உ.பி அரசு அயோத்தி கும்பாபிஷேகம்; ஜனவரி 22ல் ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக 30 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வரும் 85 வயது மூதாட்டி
எழுத்தின் அளவு:
அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக 30 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வரும் 85 வயது மூதாட்டி

பதிவு செய்த நாள்

10 ஜன
2024
10:01

தன்பாத் :ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் வரை வாய் திறந்து பேச மாட்டேன் என, கடந்த 30 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டு வந்த, ஜார்க்கண்டைச் சேர்ந்த, 85 வயது மூதாட்டி, வரும், 22ம் தேதி, தன் விரதத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர், சரஸ்வதி தேவி, 85. இவருக்கு, நான்கு மகன்கள், நான்கு மகள்கள். இவரது கணவர் அகர்வால், 1986ல் இறந்து விட்டார். அதற்கு பின், ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டு, கடவுள் ராமரை வழிபடுவதையும், அவர் புகழ் பாடுவதையுமே, லட்சியமாக வைத்து செயல்பட்டு வருகிறார், சரஸ்வதி. கடந்த, 1992ல் ராமஜென்ம பூமியில் இருந்த மசூதி அகற்றப்பட்ட பின், சரஸ்வதி தேவி ஒரு சபதம் எடுத்தார்.

அடிக்கல்: ராமஜென்ம பூமியில், ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கும் வரை, வாய் திறந்து பேச மாட்டேன். மவுன விரதம் இருப்பேன் என, அறிவித்த அவர், அந்த சபதத்தை தீவிரமாக பின்பற்றத் துவங்கினார். தனக்கு வேண்டியவற்றை சைகை வாயிலாகவே பிறருக்கு தெரிவித்து வந்தார். சைகையால் விளக்க முடியாத விஷயங்களை, எழுதி காட்டு வதையும் வழக்கமாக வைத்திருந்தார். பெரும்பாலான நேரத்தை, கடவுள் ராமரை வழிபடுவதற்காகவே கழித்து வந்தார். கோவில்களுக்கு சென்று ராமரைப் பற்றி பாடல்களை பாடுவது, ஹனுமன் சாலிசா பாடுவது என, தன் அன்றாட வாழ்வை நகர்த்தி வந்தார். இடையில், சில தவிர்க்க முடியாத காரணத்தால், மதிய வேளையில், ஒரு மணி நேரம் மட்டும், மற்றவர்களுடன் உரையாடி வந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மவுன விரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் தான், 2020ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை கேள்விப்பட்டதும், மீண்டும் முழுமையான மவுன விரதத்தை துவக்கிய சரஸ்வதி தேவி, கும்பாபிஷேகத்தன்று தான், இனி வாய் திறந்து பேசுவேன் என அறிவித்தார். தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும், 22ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும்படி சரஸ்வதி தேவிக்கு , ஆன்மிக அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மகிழ்ச்சி: இதை ஏற்று, தன்பாதில் இருந்து நேற்று அயோத்திக்கு, கங்கா சட்லெஜ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து சரஸ்வதி தேவியின் மகன் ஹரே ராம் அகர்வால் கூறியதாவது: கடவுள் ராமருக்காகவே, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு உள்ளார், என் தாய். ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடைய அவர், பிடிவாதமான குணமுடையவர். 1992ல் இருந்து மவுன விரதம் இருந்து வருகிறார். ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தற்போது அயோத்திக்கு சென்றுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக நாள், என் தாய்க்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான ஒரு நாளாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar