Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் ... பொங்கல் விடுமுறை;  பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் பொங்கல் விடுமுறை; பழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதவனுக்கு நன்றி; தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
ஆதவனுக்கு நன்றி; தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2024
07:01

சென்னை: இன்று தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் தை முதல் நாள் கெண்டாடப்படும் தைப்பொங்கல் தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகையாக கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் வரும் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை நீக்கியும், வீட்டினை சுத்தம் செய்தும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தயார் ஆவார்கள். அன்று மாலை வீட்டின் நிலைக்கதவுக்கு மேலே கூரைப்பூ, மாவிலை, தும்பை, வேப்பிலை, நாயுருவி போன்றவற்றை கொண்டு தயார் செய்த காப்பு கட்டினை கட்டுவார்கள். இதன் மூலம் பாதுகாப்பும், தெய்வத்தின் அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆதவனுக்கு நன்றி: நம் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் தங்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்தும், கரும்புகளை சாத்தியும் தேங்காய், பழம், வைத்து சூரியனை வழிபடுகின்றனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வண்ணக் கோலங்களை வரைந்து பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

ஜல்லிக்கட்டு: பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். இதில் பயிற்சி பெற்ற காளைகள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தினமலர் டாட் காம் தெரிவித்துக் கொள்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar