அயோத்தி ராமர் கும்பாபிஷேக பூஜைகள் இன்று கோலாகல துவக்கம்; கருவறை பணி நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 08:01
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் தங்க கதவு பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில் கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன. 18ல் கருவறையில் வைக்கப்பட உள்ளது.