மாட்டுபொங்கல் ; அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 08:01
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுபொங்கலை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகில் பெரிய நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பலவகையான இனிப்புகள், பழங்கள் மற்றும் காய்கனிகளில் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.