அமெரிக்காவில் பறக்கும் ராமர் கொடி; டைம்ஸ் சதுக்கத்தில் உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 08:01
அமெரிக்கா; ராமர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உற்சாகமாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்க உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் இந்துக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அயோத்தி ராம் மந்திரில் பிரான் பிரதிஷ்டை விழாவைக் கொண்டாடுவதற்காக இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குவிந்துள்ளனர். நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரும் ராமரின் படத்துடன், ராமர் கொடியுடன் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.