11 நாட்கள் கடும் விரதம்; பால ராமரை தரிசித்து நிறைவு செய்தார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 02:01
அயோத்தி; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை முன்னிட்டு 11 நாட்களாக தான் கடைப்பிடித்த அனுஷ்தானா விரதத்தை தீர்த்தம் குடித்து நிறைவு செய்தார் பிரதமர் மோடி.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று (ஜன.,22) நடைபெற்றது. கருவறையில் பகவான் பால ராமர் விக்ரஹத்தை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். இந்த புனிதமான பணிக்காக, கடந்த 12ம் தேதி கடுமையான விரதத்தை துவங்கினார். மனதையும் உடலையும் முழுமையாக தூய்மைப்படுத்துவதற்கான 11 நாள் விரதம் அது. எளிய உணவு வகைகளை உட்கொள்வது, தரையில் போர்வை விரித்து படுப்பது, இளநீர் பருகுவது உள்ளிட்ட சாஸ்திரங்களை அவர் விரத நாட்களில் கடைப்பிடித்து வந்தார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை முன்னிட்டு 11 நாட்களாக தான் கடைப்பிடித்த அனுஷ்தானா விரதத்தை தீர்த்தம் குடித்து நிறைவு செய்தார் பிரதமர் மோடி.