ராம் லல்லாவை நாளை முதல் தரிசிக்கலாம்; தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 05:01
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. இதற்காக கடந்த 11 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வந்த மோடி, பிராண பிரதிஷ்டை செய்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். விழாவில் ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் பங்கேற்றனர். மத வேறுபாடு பாராமல் அயோத்தியில் உள்ள அனைவரும் குதுாகலமாக வீடு, கடைகள் வீதிகளை அலங்கரித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிராண பிரதிஷ்டைக்கு பின் நாளை ராம் லல்லாவின் (பால ராமர்) தரிசனம் தொடங்கும். என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.