அயோத்தியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2024 12:01
அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகத்தின் குபேர் திலா பகுதியில் பழமையான சிவன் கோவில் உள்ளது. ராமர் கோவிலை நிர்மாணித்த ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர், இந்த சிவன் கோவிலையும் புனரமைத்தனர். ராமர் விக்ரஹத்தின் பிராண பிரதிஷ்டை முடிந்த பின், கோவில் வளாகத்தில் உள்ள குபேர் திலா வந்த பிரதமர் மோடி, சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். பின் கோவிலை வலம் வந்து வழிபட்டார். சீதையை ராவணன் அபகரித்து சென்ற போது, சீதையை காப்பாற்ற வந்த ஜடாயு பறவை, ராவணனால் கொல்லப்பட்டது. அந்த ஜடாயுவுக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.ஜடாயுவின் அத்தகைய கடமை உணர்வுதான் திறமையான மற்றும் தெய்வீக இந்தியாவின் அடிப்படை, என, பிரதமர் தெரிவித்தார்.
பணியாளர்களுக்கு கவுரவம்; உலகமே வியக்கும்படியாக அயோத்தி ராமர் கோவிலை கட்டி முடித்துள்ள கட்டடப் பணியாளர்களை அழைத்து, அவர்கள் மீது மலர் துாவி பிரதமர் மரியாதை செய்தார். இந்த நிகழ்வு காண்போரை நெகிழச் செய்வதாக அமைந்தது.