பதிவு செய்த நாள்
23
ஜன
2024
11:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை நேற்று மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அப்போது பிரதிஷ்டையின் போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டது மெய்சிலிர்க்க வைத்தது என அங்குள்ள பக்தர்கள் கூறினர்.
ஆச்சர்ய கலை நுணுக்கம்; பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை பிரமிக்க வைக்கும் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் சிலையின் கீழ்ப்பக்கம் அனுமன் மற்றும் கருடன் உள்ளனர். இதையடுத்து பெருமாளின் தசாவதாரமான வாமனன், பரசுராமன், நரசிங்கம், ஸ்ரீராமன், வராகம், கூர்மம், கண்ணன், மச்சம், கல்கி அவதாரங்கள் உள்ளனர். மேலும், சக்கரம், வாசுதேவன், சங்கு, தாமரை, பிரணவம், கதை, சுவத்திகம், பிரம்மன், ருத்திரனும், புத்தரும் உள்ளனர். சிரித்த முகத்துடன் காட்சிதரும் குழந்தை ராமரை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். முதல் நாளே அதிகாலை முதல் ஸ்ரீராமஜெயம் கோஷத்துடன் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.