மதுரை மீனாட்சி தெப்ப திருவிழா; வண்டியூர் தெப்பக்குளத்தில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 01:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது தெப்பத் திருவிழாவில் பக்தர்களுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன.,14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதுரை சிந்தாமணியில் கதிரறுப்பு விழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர். இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் காலை 10:40 மணி முதல் 11:04 மணிக்குள் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமியும் எழுந்தருளினர். காலையில் இரு சுற்றுகள் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணியளவில் ஒரு சுற்றும் தெப்பக்குளத்தைச் சுற்றி தெப்பம் வலம் வருகிறது.