விருத்தாசலத்தில் மண் சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 02:01
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இருந்து சமயபுரம் யாத்திரை செல்லும் பெண் பக்தர்கள், மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யாத்திரை செல்லும் பெண் பக்தர்கள், இன்று பகல் 12:00 மணியளவில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு, ஜெகமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், விருத்தாம்பிகை அம்மன் சன்னதி முன் மண் சோறு சாப்பிடும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.