திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச விழா; நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 03:01
மயிலாடுதுறை: திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த ஆலயம், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான இங்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.