நாகை ; தைப்பூசத்தை, முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்போற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அடுத்த சிக்கலில் பிரசித்திப் பெற்ற சிங்காரவேலர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமர்சையாக நடைபெறும். சிக்கலில் வேல்வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண ஐதீகம். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் தை பூசம் இன்று நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருநடனக்காட்சியுடன் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து, ஷீர புஷ்கரணி என்றழைக்கக்கூடிய, பால்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பனைஓலைகளால் செய்யப்பட்ட தெப்பத்தில், 3முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.