பந்தலூர்; பந்தலூரில் இருந்து தைப்பூச திருவிழா வாரத்தின் போது, ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகின்றனர். மயில்வாகனம் பழனி பாதயாத்திரை குழு என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த குழுவினர் மாலை அணிந்து விரதம் இருந்து, பந்தலூரில் இருந்து கோவை வரை அரசு பஸ்ஸில் செல்கின்றனர். கோவையிலிருந்து ஈச்சனாரி விநாயகர் கோவில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கெடிமேடு, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், சண்முக நதி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 80 பேர் இந்த குழுவில், மாலை அணிந்து நேற்று காலை முருகன் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், ஒருங்கிணைப்பாளர் சாமி வேல் தலைமையில் புறப்பட்டனர். இவர்களை பந்தலூர் பகுதி பக்தர்கள் சார்பாக வழிய அனுப்பி வைக்கப்பட்டது.