பழமை வாய்ந்த பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2024 01:01
திருவள்ளூர்: திருள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்.
இரண்டு சித்தர்கள் வழிப்பட்ட 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவலிங்கம் 5 நிறம் மாறும் தன்மை கொண்டதாகவும் சிவராத்திரி அன்று முழு பக்தியுடன் வழிபட்டால் பஞ்சவர்ண ஸ்வாமி 5 நிறங்களும் மாறுவதாக பக்தர்கள் கண்டு செல்வதாக கூறப்படுகிறது. மேலும் திருமண பாக்கியம் நோய் தீர்க்கும் வல்லமை படைத்த பஞ்சவர்ண சுவாமி விஷக்கடிகளுக்கு விபூதி மூலம் வியாதியை சரி செய்யும் சுவாமியாக திகழ்ந்து வரும் இந்த கோவிலில் நேற்று பஞ்சவர்ண சுவாமிக்கு எட்டாம் ஆண்டு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ பஞ்சவர்ணர் பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடந்தது. இதில் ஈக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமியை வழிபட்டு ஓம் சிவாய நாமம் எழுதி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம், ருத்ராட்ச மாலை வழங்கப்பட்டது.