பதிவு செய்த நாள்
29
ஜன
2024
01:01
பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி செந்தூர் முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, காவல் தெய்வமாக உள்ள இடும்பன் கோவிலில் புதிய சிலை நிறுவப்பட்டது. இதன் குடமுழுக்கு பெருவிழா, இன்று காலை சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து தியாகராஜ் குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் வேலுச்சாமி, கருப்பையா, சுந்தர்ராசா குழுவினர் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினார்கள். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உப்பட்டி சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில் வேல், செயலாளர் முருகேசன், பொருளாளர் மோகன்தாஸ், துணைத் தலைவர் பஞ்சநாதன், துணை செயலாளர் விமல் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.