திருமலையில் புரந்தரதாசரின் ஆராதனா மஹோத்ஸவம்; பிப்., 8 முதல் 10 வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2024 01:01
திருப்பதி; கர்நாடக இசையின் தந்தை ஸ்ரீ புரந்தர தாஸின் ஆராதனா மஹோத்ஸவம் திருமலை ஆஸ்தான மண்டபத்தில் TTD தாச சாகித்திய திட்டத்தின் கீழ் பிப்ரவரி 8 முதல் 10 வரை நடைபெறுகிறது.
முதல் நாளான பிப்ரவரி 8ம் தேதி காலை சுப்ரபாதம், தியானம், கூட்டு பஜனை, நாகரசங்கீர்த்தன நிகழ்ச்சிகள், புரந்தர சாகித்ய கோஷ்டி, பல்வேறு பீடாதிபதிகளின் மங்களாசாசனம், மதியம் சங்கீர்த்தனமாலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரண்டாம் நாளான பிப்ரவரி 9ம் தேதி காலை 6 மணிக்கு அலிபிரயில் புரந்தர்தாசர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்ரீவாரி கோயிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு ஸ்ரீவாரி உற்சவமூர்த்தி ஊர்வலம், ஊஞ்சல் சேவை, தச சங்கீர்த்தனம் நடக்கிறது. கடைசி நாளான பிப்ரவரி 10ம் தேதி காலை தியானம், கூட்டு பஜனை, நகர சங்கீர்த்தனம், ஹரிதாச ரசரஞ்சனி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த ஆண்டு முதல் முறையாக, TTD தாச சாகித்ய திட்டத்தின் இசை, நடனம் மற்றும் திறமையான இளம் கலைஞர்களுக்கு "யுவ பிரதிபா புரஸ்காரா" விருதுகள் வழங்கப்பட உள்ளது.