அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்த குட ஊர்வலம்; குதிரைகள், காளை மாட்டுடன் வலம் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2024 04:01
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசியில் முதலையுண்ட பாலகனை சுந்தரனாயனார் தேவாரப் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தளமாக பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் இரண்டாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 24 ம் தேதி மஹா கணபதி யாக வேள்வி, கோவில் அன்னதான வளாகத்தில் உள்ள யாகசாலையில் நடைபெற்றது. இதில், கும்பாபிஷேக விழாவிற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதற்காக 27ம் தேதி அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தல காவேரிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தீர்த்தம் எடுத்து, நேற்று அதிகாலை திரும்பிய பக்தர்கள் அவிநாசி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் மேளதாளங்கள் முழங்க சிவ கனங்களின் வாத்திய இசைக்கேற்றவாறு குதிரைகள் நடனமாட, காளை மாட்டுடன் பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக தலக்காவேரி தீர்த்தத்தை கொண்டு சென்றனர் . இந்த தீர்த்தத்தை கும்பாபிஷேக தினத்தன்று கோபுர விமானங்களுக்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.