கோவை; ராம் நகர், வி.என் தோட்டம், முத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.