குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோவிலில் யாகம் மற்றும் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2024 11:01
மயிலாடுதுறை; குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற யாகம், பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா குமிலங்காடு கிராமத்தில் சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 3வது செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகமும், இரவு பக்தர்கள் பொங்கல் வைக்கும் விழாவும் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு தை மாதம் 3வது செவ்வாய்க் கிழமையான நேற்று சுயம்பு ஆதி நாகாத்தமனுக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். மாலை உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இரவு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபட்டனர். பூஜைகளை ஆதி நாகசக்தி பீடம் தெய்வேந்த அடிகளார் செய்து வைத்தார். விழாவை முன்னிட்டு கொள்ளிடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.