புதுச்சேரி: ஆதிபராசக்தி கோவிலில், நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.முத்தியால்பேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த 15ம் தேதியிலிருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, ஆதிபராசக்தி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.