கள்ளக்குறிச்சி: வரலாற்று சிறப்பு பெற்ற தென்கீரனூர் அருணாசலேஸ்வரர் கோவில் நிதி ஆதா ரமின்றி கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூரில் வரலாற்று சிறப்பு மிக்க அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. வானவராயன் என்ற அரசனால் கட்டப்பட்டது. சிவபக்தரான இந்த அரசன், தினமும் திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வந்த கஷ்டத்தை போக்க, இறைவன் கூற்றுப்படி இங்கு கோவில் எழுப்பப்பட்டதாக வரலாறு.இக்கோவிலில் வடக்கு நோக்கி வள்ளி, தெய்வாணை, முருகன் இருப்பது சிறப்பு. இருகால பூஜை மற்றும் பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்து வருகிறது.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஊர்மக்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் பணிகள் தொய்வு நிலையிலேயே நிற்கிறது.எனவே கோவில் ராஜகோபுரம் புதியதாக எழுப்பி திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.