Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... சிவலோக நாதர் கோவில் விழா; மலர் துாவி பக்தர்கள் வழிபாடு சிவலோக நாதர் கோவில் விழா; மலர் துாவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆறாம் கால வேள்வி பூஜை; நாளை கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆறாம் கால வேள்வி பூஜை; நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2024
12:02

திருப்பூர் : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது; நாயனாரால், முதலை விழுங்கி குழந்தையை, தேவாரம் பாடி மீட்டெழ வைத்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்; கோவிலில், நாளை காலை, 9:15 முதல், 10:15 மணிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா, கடந்த 24ம் தேதி விநாயகருக்கு வேள்வியோடு துவங்கியது. மொத்தம், எட்டு கால யாக பூஜையில், இன்று காலை, ஆறாம் கால வேள்வி பூஜையும், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. நாளை காலை, எட்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. அதன்பின், அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்ரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு நாளை, காலை, 9:15 முதல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், ஆதினங்கள், சிவாச்சார்யார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி, அவிநாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.

1,000 போலீசார் பாதுகாப்பு; கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து மாற்றம் போன்றவற்றை செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில், மாநகரம், மாவட்ட போலீசார் என, ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar