Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதமந்திரம் முழங்க அவிநாசி ... கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், கவர்னர் ரவி சுவாமி தரிசனம் கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்வியில் சிறக்க.. சிவனை வேண்டி 1000 மாணவிகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்வியில் சிறக்க.. சிவனை வேண்டி 1000 மாணவிகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

02 பிப்
2024
11:02

மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1000 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, தெப்பக்குளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

தைவெள்ளியை முன்னிட்டு இன்று (02ம் தேதி) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விடுமுறை முடிந்து கல்வி ஆண்டில் பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி வெள்ளிக்கிழமையில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை வெள்ளியில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். தைவெள்ளியை முன்னிட்டு இன்று நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar