Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வியில் சிறக்க.. சிவனை வேண்டி 1000 ... 17,000 கோவில்களில் ஒரு கால பூஜைக்கு ரூ.200 கோடி 17,000 கோவில்களில் ஒரு கால பூஜைக்கு ரூ.200 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், கவர்னர் ரவி சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், கவர்னர் ரவி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2024
12:02


தஞ்சாவூர்,- பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சிறப்பு ஸ்தலமான திருபுவனம் அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் தருமபுரம் ஆதீனம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சைவ ஆதீனங்கள், துறவியர் பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சிறப்பு ஸ்தலமான திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. 3ம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இக்கோவிலில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களை கொண்டது. இக்கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, சுமார் 4 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா, கடந்த ஜன.29ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.


தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன்,  ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடன் பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று (பிப்.2ம் தேதி) பிரம்மாண்ட யாகசாலை மண்டபத்தில் 8ம் கால யாக  பூஜையில் மகா பூர்ணாஹூதி செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு, தருமபுரம் ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலை மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்கள், குருமகாசந்நிதானங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி மீனா தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar