பிராண பிரதிஷ்டைக்கு பின் அயோத்தியை அலங்கரிக்கும் நகரும் கோலங்கள்; வலைதளங்களில் வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2024 03:02
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா 22-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து கூட்டம் அலைமோதி வருகின்றனர். பிராண பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு, உ.பி.யின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமிக்கு ஏராளமான ராம பக்தர்கள் வந்து செல்கின்றனர். அயோத்தியில் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரதிஷ்டைவிழாவிற்குப் பிறகு, அயோத்தி நகரே தினமும் விழா கோலத்தில் காட்சியளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிட்டல் ரங்கோலி அயோத்தி தெருக்களை அலங்கரிக்கிறது. டிஜிட்டல் ரங்கோலியால் அலங்கரிக்கப்பட்ட, ஹனுமங்கரி கோவில் நுழைவு சாலை காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.