எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே கேசம்பட்டி ஆதிசக்தி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கடந்த ஜன. 30 ஆம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை வேத பாராயணத்துடன் நான்காம் கால யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேம் நடந்தது. தொடர்ந்து ஆதிசக்தி முத்து மாரியம்மன் சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, காலபைரவர், நவக்கிரகம் பெரியகருப்பர் சுவாமிகளுக்கும் கும்பாபிஷேம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மணலூர் கேசம்பட்டி பொதுமக்கள் மற்றும் செல்வமுத்துக்குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.