ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்ஸவம்; 3நாட்கள் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2024 01:02
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எட்டு வருடங்களுக்கு பிறகு மாசி தெப்ப உற்சவம் பிப்ரவரி 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் நடக்கிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக நகரில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பியது. இதேபோல் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து மாசி பவுர்ணமியை முன்னிட்டு தெப்ப உற்சவத்தை நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். அதன்படி தெப்ப உற்சவத்தை நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பிப்ரவரி 24,25, 26 ஆகிய மூன்று நாட்களில் தினமும் இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை தெப்ப உற்சவத்தை நடத்த உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருவதாகவும் செயல் அலுவலர் முத்துராஜா தெரிவித்தார்.