கோவை; சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் புவனேஸ்வரருக்கு தை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்பம் மற்றும் வெண்ணிற வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.