திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவது எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2024 03:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6.6.2011ல் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் தற்போது மீண்டும் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கவில்லை. கோயில் வளாகத்திலுள்ள (திருக்குளம்) லட்சுமி தீர்த்த குளத்தின் உள்புற கற் சுவர்கள் சேதமடைந்து கிடந்தது. அப்பணியை துவக்க அரசின் அனுமதி தாமதமானதால், கும்பாபிஷேக பணிகளும் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அரசு அனுமதி கிடைத்து லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பின்பு அறங்காவலர்கள் நியமனத்திற்காக கும்பாபிஷேக பணிகள் தாமதமானது. தற்போது அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றனர். ஆனால் கும்பாபிஷேகம் சம்பந்தமான ஆரம்பகட்ட பணிகள்கூட துவங்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில், கீழ ரத வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், மேலரதவீதியிலுள்ள பாம்பலம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேக பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.