திருச்செந்தூர் முருகன் கோயிலில் எதிரிகளை வெல்ல சத்ருசம்ஹார பூஜை செய்த அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2024 03:02
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சத்ருசம்ஹார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலுக்கு வந்தார். பின்னர் அவர் மூலவர் சண்முகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி சன்னதிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்காகவும், எதிரிகளை வெல்ல கூடிய சத்ருசம்ஹார பூஜை செய்தார். நடிகர் விஜய்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் துாத்துக்குடி மாவட்ட விஜய்நற்பணி இயக்கமாவட்ட தலைவர் பில்லாஜெகன், அமைச்சருடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.