பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நடந்த விழாவில் 200 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டப்பாவை அமைச்சர் சக்கரபாணி அறிமுகப்படுத்தினார்.
அதன் விலை ரூ. 20. புது தாராபுரம் ரோட்டில் ரூ.68 லட்சத்தில் கட்டப்பட்ட மனநல காப்பகத்தையும் திறந்தார். முருகன் கோயில் செல்ல படிப்பாதையில் உள்ள இடும்பன் கோயில் அருகே கட்டப்பட்ட மருத்துவ உதவி மையமும் திறக்கப்பட்டது. கோயில் துணை கமிஷனர் லட்சுமி, டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் விலை இல்லா அரிசி தொடர்ந்து ரேஷனில் வழங்கப்படுகிறது. கூடுதலாக அரிசி ஆலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரிசி பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்படும். விற்கப்படும் அரிசியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். பழநி முருகன் கோயிலுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கப்படவுள்ளது என்றார்.