அவிநாசி கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2024 11:02
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முன்னாள் அறங்காவலர் பெயரில் உள்ள கல்வெட்டு உடைப்பு.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவிலில் கடந்த ஆறு மாத காலமாக மராமத்து திருப்பணிகள் பல்வேறு உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வந்தது. கடந்த 1971ம் ஆண்டு கும்பாபிஷேக விழா கல்வெட்டானது பிரதான ராஜகோபுரம் அருகில் ஒரு கல்வெட்டும், அம்மன் சன்னதி ராஜகோபுரம் அருகே ஒரு கல்வெட்டும் நிறுவப்பட்டது. அதனை அப்போதைய அறங்காவலரான அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் முயற்சியில் மத்திய தொல்லியல் துறையின், கட்டுப்பாட்டில் இருந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை மீட்டு இரண்டு ராஜகோபுரங்கள் கட்டப்பட்டது. அதற்காக கல்வெட்டுகள் பதிக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற கும்பாபிஷேக பணிகளின் போது ஜேசிபி கொண்டு அந்த கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் அலட்சியமான செயலால் வரலாற்று கல்வெட்டுகள் உடைக்கப்பட்டது மிகவும் வேதனை தருகின்றது. இறைபணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்களின் செயலை அவமதிப்பதாக கருதுகிறேன். எனவே மீண்டும் அந்தக் கல்வெட்டை நிறுவ அறங்காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராயப்பனின் பேரன் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.