மதுராவில் கோவிலை இடித்து அவுரங்கசீப் மசூதி கட்டினார் ; இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2024 07:02
மதுராவில் கோவிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஐ.,) பதில் அளித்துள்ளது.
உத்தரபிரதேசம், மெயின் புரியை சேர்ந்த அஜய் பிரதாப் சிங் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஐ.,) விடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏஎஸ்ஐ-யின் ஆக்ரா பிராந்திய அலுவலகம் அளித்த பதிலில் மதுராவிலிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அங்கு ஷாயி ஈத்காமசூதியை கட்டியதாகவும், அக்கோயிலை கேசவ்தேவ் கோயில் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக 1920-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவான அரசு கெஜட் குறிப்புகளயும் காட்டியுள்ளது. கிருஷ்ண ஜென்மபூமியாக மக்கள் வழிபடும் மதுரா கிருஷ்ணர் கோயில் முந்தைய காலங்களில் கேசவ்தேவ் கோயில் என்று அழைக்கப்பட்டது. மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐ தெரிவித்த இந்த தகவல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.