பதிவு செய்த நாள்
09
பிப்
2024
11:02
கோவை: தமிழகத்திலிருந்து, அயோத்தி ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன. கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் ரயில் புறப்பட்டது. எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.
அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது; தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து, அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இது குறித்து அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது; தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து, அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அயோத்திக்கு செல்ல ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுவது குறிபிடத்தக்கது.