பாதூர் பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2024 03:02
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
பாதூர் பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவில் நிகும்பலா யாகத்தில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார். கோவிலில் தை அமாவாசையையொட்டி இன்று நண்பகல் 12 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தில் பால், தயிர், நெய், பழங்கள் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் மிளகாய் வற்றல் யாகத்தில் சாற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறக் கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் போட்டனர். பின்னர் புடவைகள், வளையல்கள் ஆகியவையும் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் தி.மு.க.,முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார். அப்போது இளஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ் உடன் இருந்தார். உளுந்தூர்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.