ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா துவக்கம்; கொடிமரத்தை சுற்றிய கருடன்.. சாமி வந்து ஆடிய பெண்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2024 05:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, 101 அடி மூங்கில் கம்பம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தை அமாவாசையன்று குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கியது. முன்னதாக, 101 அடி நீள கொடிக் கம்பத்திற்கு பட்டுச்சேலை, மல்லிகைப் பூ, மாவிலைத் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கொடிக்கம்பத்தை மங்கல வாத்தியம் முழங்க வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். 101 அடி மூங்கில் கம்பம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தின் போது, கருடன் வந்ததையடுத்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இதனால் பெண்கள் சாமி வந்து ஆடினர்.