பதிவு செய்த நாள்
26
அக்
2012
10:10
பெங்களூரு: பெங்களூரு நாமஸ்மரண் அமைப்பு சார்பில், புரந்தரதாசர் ஜெயந்தி, கோபால கிருஷ்ண பாகவதர் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. கடந்த, 400 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் பாடல்கள் பாடி, சங்கீதத்தை வளர்த்தவர், புரந்தரதாசர். இவரை தொடர்ந்து வந்த, ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர், இந்தியா முழுவதும் கிராமம், கிராமமாக சென்று சங்கீதத்தை வளர்த்தார். இவர், 1971ல் காலமானார். இவர்களின் புகழ் பரப்பும், பெங்களூரைச் சேர்ந்த, "நாமஸ்மரண் என்ற அமைப்பு, புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி விழாவை, 12வது ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் சங்கீதம் வளர்த்து வரும் பாகவதர்கள் நால்வரை தேர்வு செய்து, அவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு மற்றும் விருது வழங்கி கவுரவிக்கின்றனர். பெங்களூரு ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்கத்தில் துவங்கிய விழாவில், புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாகவதர் படத்திற்கு மலர் தூவி, டில்லி சுப்பராமா பாகவதர் குத்து விளக்கேற்றினார். ஈரோடு ராஜாமணி பாகவதர், நாமஸ்மரண் செயலர் அனந்த சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா, 29ம் தேதி வரை நடக்கிறது.