பழநி: பழநி மலைக்கோயில் "ரோப்கார் பராமரிப்பு பணிகள் முடிவடைவதற்கு ஒரு மாதமாகும். என தேவஸ்தானம் அறிவித்துள்ளது."ரோப்கார் இரும்பு வடக்கயிற்றில் இருந்து, அதிக சத்தம் வருவதன் காரணமாக, கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு. பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இரும்பு வடக்கயிற்றில் ஆயில், கீரிஸ் தடவி பெட்டிகள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இருப்பினும் சத்தம் தொடர்ந்து வருவதால், 700 மீட்டர் இரும்பு வடக்கயிற்றை மாற்றுவதற்கு, தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. அதுவரை "ரோப்கார் ஓடாது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,"" ரோப்கார் இரும்பு வடக்கயிற்றில்(அயன் ரோப்) சத்தம் அதிகம் கேட்பதால், அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய "அயன் ரோப் மாற்றுவதற்காக பொறியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒரு மாதகாலம் வரை ஆகும். விரைவில் (அயன் ரோப்), மாற்றப்படும், என்றார்.