காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 108 கலசங்கள் நன்கொடை வழங்கிய பகதர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2024 10:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலுயிடம் ரயில்வே கோடூரைச் சேர்ந்த பக்தர் கஞ்சிராஜு செங்கல் ராஜு - கலாவதி குடும்பத்தினர், சுமார் 1,10,000ரூ மதிப்புள்ள 108 கலசங்களை தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து அஞ்சூரு தாரக சீனிவாசுலு பேசுகையில் தனது சிறு வயது நண்பனான செந்தில் ராஜு சிவன் கோயில் துணை கோயில்களின் மகா கும்பாபிஷேகத்திற்கு தேவையான கலசங்களை வழங்குமாறு கேட்ட உடனேயே ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 108 கலசங்களை தேவஸ்தானத்திற்கு வழங்கினார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். முன்னதாக நன்கொடையாளரின் குடும்பத்தாருக்கு கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர். காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.