பதிவு செய்த நாள்
12
பிப்
2024
10:02
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் அலர்மேல் மங்கை சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, பிரசாத விநியோகம் நடந்தது. சனிக்கிழமை திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவா காலம், பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், யாகசாலை பிரவேசம், விசேஷ ஹோமங்கள், திவ்ய பிரபந்த பாராயணம், விமான கலச ஸ்தாபனம் நடந்தன. நேற்று வேதம் மற்றும் திவ்ய பிரபந்த பாராயணம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவும் நடந்தது. தொடர்ந்து, திருமஞ்சனம், கோ பூஜை, தச தரிசனம், மங்கள ஆரத்தி, திவ்ய பிரபந்த சாற்று முறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடந்தன. தொடர்ந்து, டி.ஜி., புதூர் சீனிவாச பெருமாள் பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவையொட்டி குருவரிஷி மலை மேல்முடி அரங்கநாதர் அறக்கட்டளையின் சார்பாக சீனிவாச பெருமாளின் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.