பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை உள்ளது தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கிரிவீதியில் வெளிமாநில வியாபாரிகள் சிலர் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் அடிவாரம் கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். சரவண பொய்கை முடி காணிக்கை மையத்தில் சர்வர் பகுதி ஏற்பட்டதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்தனர் அங்கே ஆக்கிரமிப்பு இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி கோயிலில் ரோப்கார் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் அன்னதான செல்லும் வரிசையில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும்.